English
Sri Lanka Ambassador Ameer Ajwad Meets with the Governor of ZATCA of Saudi Arabia
Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia Ameer Ajwad met recently with the Governor of the Zakat, Tax and Customs Authority (ZATCA) of the Kingdom of Saudi Arabia, Suhail Abanmi, together with ZATCA senior officials. During the meeting, they discussed areas of bilateral cooperation, including the ratification of the Agreement on the Avoidance of Double Taxation between Sri Lanka and Saudi Arabia, as well as tax matters concerning Sri Lanka International Schools in the Kingdom of Saudi Arabia.
Chairman of the Board of Directors of the Sri Lanka International School in Riyadh, Mr. Mohamed Fahim Mohamed Jiffry, also accompanied the Sri Lanka Ambassador and participated in the meeting.
The Zakat, Tax and Customs Authority (ZATCA) is the Saudi government authority responsible for administering and enforcing zakat, tax and customs regulations in the Kingdom. It oversees areas including VAT, excise tax, customs duties, e-invoicing (Fatoora), zakat compliance and customs procedures, playing an important role in facilitating trade while ensuring compliance with Saudi fiscal and customs laws.
Embassy of Sri Lanka
Riyadh
09.09.2026
Tamil
சவூதி அரேபியாவின் ஸகாத்,வரி மற்றும் சுங்க அதிகாரசபையின் (ZATCA) ஆளுநரை இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் சந்தித்தார்.
சவுதி அரேபிய ஸகாத்,வரி மற்றும் சுங்க அதிகாரசபையின் (ZATCA) ஆளுநனர் ஸுஹைல் பின் மொஹமட் அபான்மி அவர்களை, சவுதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவர் கௌரவ அமீர் அஜ்வத் அவர்கள் அண்மையில் சந்தித்தார். இச்சந்திப்பில் ZATCA உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பின்போது, இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக, இரு நாடுகளுக்குமிடையிலான இரட்டை வரிவிதிப்பைத் தவிர்ப்பதற்கான ஒப்பந்தத்தை (Agreement on Avoidance of Double Taxation) அங்கீகரித்தல் மற்றும் சவூதி அரேபியாவில் இயங்கி வரும் இலங்கை சர்வதேச பாடசாலைகள் தொடர்பான வரி விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
இச்சந்திப்பில், ரியாத்தில் உள்ள இலங்கை சர்வதேசப் பாடசாலையின் பணிப்பாளர் சபைத் தலைவர் திரு. மொஹமட் பாஹிம் மொஹமட் ஜிப்ரி அவர்களும் இலங்கைத் தூதுவருடன் கலந்துகொண்டார்.
ஸகாத்,வரி மற்றும் சுங்க அதிகாரசபை (ZATCA) என்பது சவூதி அரேபிய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் அதிகாரபூர்வ அமைப்பாகும். சவூதி அரேபியாவில் ஸகாத், வரி மற்றும் சுங்க விதிமுறைகளை நிர்வகித்தல் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றுக்கு இவ்வமைப்பு பொறுப்பாக செயற்பட்டுவருகின்றது.
ZATCA-வின் பொறுப்புகளில் VAT (பெறுமதி சேர்க்கப்பட்ட வரி), Excise Tax (கலால் வரி), சுங்க வரிகள், மின்னணு விலைப்பட்டியல் (Fatoora), ஸகாத் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தல் மற்றும் சுங்க ஒழுங்குவிதிமுறைகளை கவனித்தல் ஆகியவை அடங்குகின்றன. மேலும், சவூதி அரேபியாவின் நிதி மற்றும் சுங்க சட்டங்களுக்கு இணங்குவதை உறுதி செய்வதுடன், வர்த்தக நடவடிக்கைகளை எளிதாக்குவதிலும் இவ்வதிகாரசபை முக்கியப் பங்கு வகிக்கிறது.
இலங்கைத் தூதரகம்
ரியாத்
09.09.2026
Arabic
التقى سعادة سفير سريلانكا، أمير أجود، محافظ الهيئة العامة للزكاة والضرائب والجمارك في المملكة العربية السعودية.
التقى سعادة سفير سريلانكا لدى المملكة العربية السعودية، أمير أجود، مؤخرا بمحافظ الهيئة العامة للزكاة والضرائب والجمارك، سهيل أبانمي، برفقة عدد من كبار مسؤولي الهيئة. وخلال اللقاء، ناقش الجانبان مجالات التعاون الثنائي، بما في ذلك التصديق على اتفاقية تجنب الازدواج الضريبي بين سريلانكا والمملكة العربية السعودية، بالإضافة إلى المسائل الضريبية المتعلقة بالمدارس السريلانكية الدولية في المملكة.
كما رافق سعادة السفير رئيس مجلس إدارة المدرسة السريلانكية الدولية في الرياض، السيد . محمد فهيم محمد جفري، وشارك في اللقاء.
الهيئة العامة للزكاة والضرائب والجمارك هي الجهة الحكومية السعودية المسؤولية عن إدارة وتطبيق قوانين الزكاة والضرائب والجمارك في المملكة. تشرف السفارة على مجالات تشمل ضريبة القيمة المضافة، والضريبة الانتقائية، والرسوم الجمركية، والفواتير الإلكترونية (الفاتورة)، والزكاة، والاجراءات الجمركية، وتضطلع بدور هام في تيسير التجارة مع ضمان الامتثال لقوانين المالية والجمارك السعودية.
سفارة سريلانكا
الرياض
09/09/2026
Source: View the original Facebook post
