සෞදි අරාබි රාජධානියේ ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ තානාපති කාර්යාලය

சவூதி அரேபிய இராச்சியத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தூதரகம்

Embassy of the Democratic Socialist Republic of Sri Lanka in the Kingdom of Saudi Arabia

Embassy Flag

Sri Lanka Ambassador Marks Aseer Region Visit by Planting Tree in Support of Saudi Green Initiative (SGI)

Content image
Content image
Content image
Content image

English

Sri Lanka Ambassador Marks Aseer Region Visit by Planting Tree in Support of Saudi Green Initiative (SGI)

Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia, Ameer Ajwad, planted tree sapling at the National Center for Vegetation Development and Combating Desertification in the Aseer Region, marking his visit to the region as part of the ‘Sri Lanka Ambassador’s Tree Planting Programme’, a flagship initiative launched by the Embassy of Sri Lanka in Riyadh in 2024, coinciding with the 50th anniversary of diplomatic relations between Sri Lanka and Saudi Arabia. The campaign aims to reaffirm Sri Lanka’s commitment to supporting the environmental objectives of the Saudi Green Initiative (SGI).

Speaking on the occasion, Ambassador Ameer Ajwad highlighted that the tree planting campaign represents a practical expression of Sri Lanka’s solidarity with Saudi Arabia’s environmental transformation and its commitment to strengthening cooperation in areas of common interest, including reforestation, biodiversity conservation, land restoration, climate resilience and sustainable development.

The tree planting in Aseer builds on a series of similar activities undertaken by the Embassy of Sri Lanka in Riyadh on previous occasions at five public parks in Riyadh, the National Park of Al-Qassim, and the Saudi National Center for Vegetation Cover and Combating Desertification (NCVC) in Al-Ahsa, together with members of the Sri Lankan community. These initiatives bring Sri Lanka’s environmental outreach closer to local communities while contributing to the Kingdom’s greening efforts. The Ambassador noted that Aseer, with its distinctive mountains, forests, biodiversity and natural landscapes, provides a particularly meaningful setting for such an initiative.

Sri Lanka’s commitment to environmental cooperation with the Kingdom has gained further momentum following Sri Lanka’s accession to the Middle East Green Initiative (MGI) as a Regional Member in January 2026. The Sri Lankan delegation participated in the recently held 20th MGI Executive Committee Meeting, led by Deputy Minister of Environment Anton Jayakody.

The Sri Lanka Ambassador’s Tree Planting Campaign symbolises Sri Lanka’s support for the Kingdom’s environmental vision, its commitment to strengthening bilateral cooperation in the environmental sector, and its aspiration to contribute to a greener and more sustainable future for both countries.

The Embassy of Sri Lanka in Riyadh, together with the Sri Lankan community in the Kingdom, will continue to promote practical initiatives supporting the environmental priorities of the Kingdom of Saudi Arabia and strengthening Sri Lanka–Saudi cooperation in climate action, environmental sustainability, biodiversity conservation, afforestation, sustainable tourism and combating desertification.

Embassy of Sri Lanka
Riyadh
24 August 2026

Sinhala

සෞදි හරිත වැඩසටහනට (SGI) සහාය දක්වමින් ශ්‍රී ලංකා තානාපතිවරයා අසීර් කලාපයේ සංචාරය සනිටුහන් කරමින් පැළයක් රෝපණය කරයි

සෞදි අරාබි රාජධානියේ ශ්‍රී ලංකා තානාපති අමීර් අජ්වාඩ් මහතා, අසීර් කලාපයේ පිහිටි “වෘක්ෂලතා සංවර්ධනය සහ කාන්තාරීකරණයට එරෙහි ජාතික මධ්‍යස්ථානයේදී” පැළයක් රෝපණය කරමින් සිය අසීර් කලාප සංචාරය සනිටුහන් කළේය. මෙම පැළ රෝපණය, ශ්‍රී ලංකාව සහ සෞදි අරාබිය අතර රාජ්‍යතාන්ත්‍රික සබඳතා ස්ථාපිතකර වසර 50ක් සපිරීම නිමිත්තෙන් 2024 වසරේදී රියාද්හි ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය විසින් ආරම්භ කරන ලද ප්‍රමුඛ වැඩසටහනක් වන “ශ්‍රී ලංකා තානාපතිවරයාගේ රුක් රෝපණ වැඩසටහන” යටතේ සිදු කෙරිණි. සෞදි හරිත වැඩසටහනේ (Saudi Green Initiative – SGI) පාරිසරික අරමුණු සඳහා ශ්‍රී ලංකාවේ සහයෝගය සහ කැපවීම යළි තහවුරු කිරීම මෙම වැඩසටහනේ අරමුණයි.

මෙම අවස්ථාවට එක්වෙමින් අදහස් දැක්වූ තානාපති අමීර් අජ්වාඩ් මහතා සඳහන් කළේ, මෙම රුක් රෝපණ වැඩසටහන සෞදි අරාබිය විසින් ක්‍රියාත්මක කරනු ලබන පාරිසරික පරිවර්තන වැඩපිළිවෙළට ශ්‍රී ලංකාව දක්වන සහයෝගීතාවයේ ප්‍රායෝගික ප්‍රකාශනයක් බවයි. එසේම, නැවත වනාන්තරකරණය, ජෛව විවිධත්ව සංරක්ෂණය, භූමි ප්‍රතිසංස්කරණය, දේශගුණික ප්‍රතිරෝධීතාව සහ තිරසාර සංවර්ධනය ඇතුළු දෙරටට පොදු වැදගත්කමක් ඇති ක්ෂේත්‍රවල සහයෝගීතාව තවදුරටත් ශක්තිමත් කිරීමට ශ්‍රී ලංකාව කැපවී සිටින බවද ඔහු අවධාරණය කළේය.

අසීර් කලාපයේ සිදු කළ මෙම රුක් රෝපණය, මීට පෙර රියාද්හි පොදු උද්‍යාන පහක, අල්-කසීම් ජාතික උද්‍යානයේ සහ අල්-අහ්සාහි වෘක්ෂලතා ආවරණ සංවර්ධනය සහ කාන්තාරීකරණයට එරෙහි සෞදි ජාතික මධ්‍යස්ථානයේදී (NCVC), ශ්‍රී ලාංකික ප්‍රජාවේ සාමාජිකයන්ගේ සහභාගීත්වයෙන් රියාද්හි ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය විසින් ක්‍රියාත්මක කළ සමාන වැඩසටහන් මාලාවක තවත් එක් පියවරකි. මෙම වැඩසටහන් මගින් ශ්‍රී ලංකාවේ පාරිසරික සහයෝගීතා වැඩසටහන් දේශීය ප්‍රජාව වෙත වඩාත් සමීප කරමින්, සෞදි අරාබියේ හරිතකරණ ප්‍රයත්නයන්ට ද දායක වේ. අසීර් කලාපයේ සුවිශේෂී කඳුකර භූ දර්ශන, වනාන්තර, ජෛව විවිධත්වය සහ ස්වභාවික පරිසරය සැලකිල්ලට ගත් විට, මෙවැනි වැඩසටහනක් සඳහා එම කලාපය විශේෂ අර්ථවත් ස්ථානයක් වන බවද තානාපතිවරයා සඳහන් කළේය.

2026 ජනවාරි මාසයේදී ශ්‍රී ලංකාව “මැදපෙරදිග හරිත වැඩසටහනේ (Middle East Green Initiative – MGI) කලාපීය සාමාජික රටක්” ලෙස එක්වීමෙන් පසු, සෞදි අරාබිය සමඟ පාරිසරික සහයෝගීතාව සඳහා ශ්‍රී ලංකාවේ කැපවීම තවදුරටත් ශක්තිමත් වී ඇත. පසුගියදා පැවැති “MGI විධායක කමිටුවේ 20 වන රැස්වීමට”, පරිසර නියෝජ්‍ය අමාත්‍ය ඇන්ටන් ජයකොඩි මහතාගේ නායකත්වයෙන් යුත් ශ්‍රී ලංකා නියෝජිත කණ්ඩායම සහභාගී විය.

“ශ්‍රී ලංකා තානාපතිවරයාගේ රුක් රෝපණ වැඩසටහන”, සෞදි අරාබියේ පාරිසරික දැක්මට ශ්‍රී ලංකාව දක්වන සහයෝගය, පාරිසරික ක්ෂේත්‍රයේ ද්විපාර්ශ්වික සහයෝගීතාව තවදුරටත් ශක්තිමත් කිරීම සඳහා ඇති කැපවීම සහ දෙරට සඳහා වඩාත් හරිත හා තිරසාර අනාගතයක් ගොඩනැගීමට දායක වීමේ ශ්‍රී ලංකාවේ අපේක්ෂාව සංකේතවත් කරයි.

රියාද්හි ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය, සෞදි අරාබියේ ශ්‍රී ලාංකික ප්‍රජාව සමඟ එක්ව, සෞදි අරාබි රාජධානියේ පාරිසරික ප්‍රමුඛතා සඳහා සහාය වන ප්‍රායෝගික වැඩසටහන් තවදුරටත් ප්‍රවර්ධනය කරනු ඇත. ඒ සමඟම, දේශගුණික ක්‍රියාමාර්ග, පාරිසරික තිරසාරභාවය, ජෛව විවිධත්ව සංරක්ෂණය, වනාන්තරකරණය, තිරසාර සංචාරක කර්මාන්තය සහ කාන්තාරීකරණයට එරෙහි ක්‍රියාමාර්ග යන ක්ෂේත්‍රවල ශ්‍රී ලංකා–සෞදි සහයෝගීතාව තවදුරටත් ශක්තිමත් කිරීමටද කටයුතු කරනු ඇත.

ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය

රියාද්

2026 අගෝස්තු 24

Tamil

இலங்கைத் தூதுவர் அஸீர் பிராந்திய விஜயத்தை அடையாளப்படுத்தும் வகையில், சவுதி பசுமை முன்னெடுப்புக்கு ஆதரவாக மரக்கன்றொன்றை நட்டார்

சவுதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள், அஸீர் பிராந்தியத்திற்கான தனது விஜயத்தை முன்னிட்டு, அப்பிராந்தியத்தில் அமைந்துள்ள தாவர வள மேம்பாடு மற்றும் பாலைவனமயமாக்கலை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய நிலையத்தில் மரக்கன்றொன்றை நட்டார்.

2024 ஆம் ஆண்டு, இலங்கைக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 50ஆவது ஆண்டு நிறைவையொட்டி, ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது வேலைத்திட்டமான ‘இலங்கைத் தூதுவரின் மரநடுகை வேலைத்திட்டத்தின்’ ஒரு பகுதியாக இந்நிகழ்வு இடம்பெற்றது. சவுதி பசுமை முன்னெடுப்பின் (Saudi Green Initiative – SGI) சுற்றுச்சூழல் இலக்குகளுக்கு இலங்கை வழங்கும் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துவதே இந்த வேலைத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இந்நிகழ்வில் உரையாற்றிய தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள், மரநடுகை வேலைத்திட்டமானது சவுதி அரேபியா முன்னெடுத்து வரும் சுற்றுச்சூழல் மாற்றத்திற்கான இலங்கையின் ஒத்துழைப்பையும், மீள்காடாக்கம், உயிர்ப்பல்வகைமைப் பாதுகாப்பு, நில மறுசீரமைப்பு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறனை வலுப்படுத்துதல் மற்றும் நிலையான அபிவிருத்தி உள்ளிட்ட இரு நாடுகளுக்கும் பொதுவான ஆர்வமுள்ள துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டையும் நடைமுறை ரீதியாக வெளிப்படுத்துவதாகும் எனக் குறிப்பிட்டார்.

இந்த வகையில் ரியாதிலுள்ள ஐந்து பொது பூங்காக்கள், அல்-கஸீம் தேசியப் பூங்கா மற்றும் அல்-அஹ்ஸாவில் அமைந்துள்ள சவுதி தேசிய தாவரக் காப்பு மேம்பாடு மற்றும் பாலைவனமயமாக்கலை எதிர்த்துப் போராடுவதற்கான நிலையம் (NCVC) ஆகிய இடங்களில், சவுதி அரேபியாவின் பல பாகங்களிலும் பரந்து வாழ்கின்ற இலங்கை சமூகத்தின் உறுப்பினர்களுடன் இணைந்து, ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தினால் முன்னதாக முன்னெடுக்கப்பட்ட இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக அஸீர் பிராந்தியத்தில் இடம்பெற்ற இம்மரநடுகை நிகழ்வும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இத்தகைய முயற்சிகள் இலங்கையின் சுற்றுச்சூழல் தொடர்பான செயற்பாடுகளை உள்ளூர் சமூகங்களுக்கு மேலும் நெருக்கமாகக் கொண்டு செல்வதுடன், இராச்சியத்தின் பசுமையாக்கல் முயற்சிகளுக்கும் பங்களிப்பு செய்கின்றன. தனித்துவமான மலைத்தொடர்கள், காடுகள், உயிர்ப்பல்வகைமை மற்றும் இயற்கை நிலப்பரப்புகளைக் கொண்ட அஸீர் பிராந்தியம், இத்தகைய முயற்சியை முன்னெடுப்பதற்கு மிகவும் பொருத்தமான சூழலை வழங்குவதாகவும் தூதுவர் அவர்கள் குறிப்பிட்டார்.

2026 ஜனவரியில், இலங்கை மத்திய கிழக்கு பசுமை முன்னெடுப்பில் (Middle East Green Initiative – MGI) பிராந்திய உறுப்பினராக இனைந்துக் கொண்டதைத் தொடர்ந்து, இராச்சியத்துடனான இலங்கையின் சுற்றுச்சூழல் ஒத்துழைப்புக்கான உறுதிப்பாடு மேலும் வலுப்பெற்றுள்ளது. அண்மையில் நடைபெற்ற 20ஆவது MGI நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் என்டன் ஜெயக்கொடி அவர்களின் தலைமையில் இலங்கைத் தூதுக்குழு பங்கெடுத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

‘இலங்கைத் தூதுவரின் மரநடுகை வேலைத் திட்டம்’, இராச்சியத்தின் சுற்றுச்சூழல் தொலைநோக்குப் பார்வைக்கு இலங்கை வழங்கும் ஆதரவையும், சுற்றுச்சூழல் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டையும், இரு நாடுகளுக்கும் பசுமையானதும் நிலையானதுமான எதிர்காலத்தை உருவாக்குவதில் பங்களிக்க வேண்டும் என்ற இலங்கையின் விருப்பத்தையும் குறியீடாக வெளிப்படுத்துகிறது.

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகம் தொடர்ந்தும், இராச்சியத்தில் வாழும் இலங்கை சமூகத்தினருடன் இணைந்து, சவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல் முன்னுரிமைகளுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் யதார்த்தபூர்வமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதுடன், காலநிலை நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, உயிர்ப்பல்வகைமைப் பாதுகாப்பு, காடாக்கம், நிலையான சுற்றுலா மற்றும் பாலைவனமயமாக்கலை எதிர்த்துப் போராடுதல் ஆகிய துறைகளிலும் இலங்கை–சவுதி ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தி வருகின்றமை இங்கு நோக்கத்தக்கதாகும்.

இலங்கைத் தூதரகம்

ரியாத்

24 ஆகஸ்ட் 2026

Arabic

سفير سريلانكا يزور منطقة عسير ويغرس شجرة دعماً للمبادرة السعودية الخضراء

قام سفير جمهورية سريلانكا لدى المملكة العربية السعودية، أمير أجود، بغرس شتلة شجرة في المركز الوطني لتنمية الغطاء النباتي ومكافحة التصحر بمنطقة عسير، وذلك بمناسبة زيارته للمنطقة، وفي إطار "برنامج شجرة سفير سريلانكا"، وهي مبادرة رئيسية أطلقتها سفارة سريلانكا في الرياض عام 2024، بالتزامن مع الذكرى الخمسين لإقامة العلاقات الدبلوماسية بين سريلانكا والمملكة العربية السعودية. وتهدف المبادرة إلى التأكيد مجدداً على التزام سريلانكا بدعم الأهداف البيئية للمبادرة السعودية الخضراء.

وفي كلمته بهذه المناسبة، أوضح السفير أمير أجود أن حملة غرس الأشجار تمثل تعبيراً عملياً عن تضامن سريلانكا مع جهود المملكة في مجال التحول البيئي، والتزامها بتعزيز التعاون في المجالات ذات الاهتمام المشترك، بما في ذلك إعادة التشجير، والحفاظ على التنوع الأحيائي، واستصلاح الأراضي، وتعزيز القدرة على مواجهة آثار تغير المناخ، والتنمية المستدامة.

ويأتي غرس الشجرة في منطقة عسير امتداداً لسلسلة من المبادرات المماثلة التي نفذتها سفارة سريلانكا في الرياض في مناسبات سابقة، شملت خمس حدائق عامة في الرياض، والمتنزه الوطني في منطقة القصيم، والمركز الوطني لتنمية الغطاء النباتي ومكافحة التصحر في الأحساء، وذلك بمشاركة أفراد من الجالية السريلانكية. وتسهم هذه المبادرات في تعزيز التواصل البيئي لسريلانكا مع المجتمعات المحلية، ودعم جهود المملكة في زيادة المساحات الخضراء. وأشار السفير إلى أن منطقة عسير، بما تتميز به من جبال وغابات وتنوع أحيائي ومناظر طبيعية مميزة، توفر بيئة مناسبة وذات أهمية خاصة لمثل هذه المبادرة.

وقد اكتسب التزام سريلانكا بالتعاون البيئي مع المملكة زخماً إضافياً عقب انضمام سريلانكا إلى مبادرة الشرق الأوسط الأخضر كعضو إقليمي في يناير 2026. كما شارك وفد سريلانكا في الاجتماع العشرين للجنة التنفيذية لمبادرة الشرق الأوسط الأخضر الذي عُقد مؤخراً، برئاسة نائب وزير البيئة أنطون جاياكودي.

وترمز حملة شجرة سفير سريلانكا إلى دعم سريلانكا للرؤية البيئية للمملكة، والتزامها بتعزيز التعاون الثنائي في المجال البيئي، وتطلعها إلى الإسهام في بناء مستقبل أكثر خضرة واستدامة للبلدين.

وستواصل سفارة سريلانكا في الرياض، بالتعاون مع الجالية السريلانكية في المملكة، تنفيذ المبادرات العملية الداعمة للأولويات البيئية للمملكة العربية السعودية، وتعزيز التعاون السريلانكي السعودي في مجالات العمل المناخي، والاستدامة البيئية، والحفاظ على التنوع الأحيائي، والتشجير، والسياحة المستدامة، ومكافحة التصحر.

سفارة سريلانكا
الرياض
24 أغسطس 2026

Source: View the original Facebook post